/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை
/
மாணவர் தற்கொலை: போலீசார் விசாரணை
ADDED : பிப் 12, 2024 06:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வில்லியனுார் அருகே பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த கோர்க்காடு ஐயனார் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியம்மன். இவரது மகன் பாலாஜி, 15; அப்பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். வயிற்று வலி காரணமாக சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்தார்.
இதுபற்றி, வகுப்பாசிரியர், மாணவருடன், அவரது பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பினர். இதையடுத்து, பாலாஜியை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனமுடைந்த பாலாஜி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.