/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை
/
மாணவர் தற்கொலை போலீசார் விசாரணை
ADDED : செப் 23, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கல்லுாரியை மாற்றி சேர்த்ததால் மனமுடைந்த மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்திரப்பாளையம் காந்தித்திருநல்லுார், வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பொற்செல்வன், 20. இவர் சேதாரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பயின்றார்.
இவருக்கு படிப்பு சரியாக வராததால் அவரது தந்தை, அங்கிருந்து மூலக்குளத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் சேர்த்தார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த பொற்செல்வன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அவரது அறை மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.