ADDED : மார் 19, 2024 05:31 AM

பாகூர்: மணப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில், வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை, பள்ளி தலைமையாசிரியர் அரிவரதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி கல்வி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 'அரசு பள்ளி ஆனந்த பள்ளி', 'அரசு பள்ளியில் சேர்த்திடுவோம் ஆனந்தமாய் கல்வி கற்றிடுவோம்' போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டு, மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று, அரசு பள்ளியின் சிறப்புகள் குறித்து எடுத்து கூறி, மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் ஜெயசெல்வி, விவேகானந்தன், கலைச்செல்வி, ஏகதேவி, சுமதிராகவன், சுஜித், ஜெயந், அலெக்ஸ், மஞ்சு, மதிவதனி, இந்திரா, பானுபிரியா, ரவினா, பிருந்தா மற்றும் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.
