தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் மாளிகை முற்றுகையிட முயற்சி :மாணவர்கள் - போலீசார் தள்ளுமுள்ளு 

கவர்னர் மாளிகை முற்றுகையிட முயற்சி :மாணவர்கள் - போலீசார் தள்ளுமுள்ளு 

கவர்னர் மாளிகை முற்றுகையிட முயற்சி :மாணவர்கள் - போலீசார் தள்ளுமுள்ளு 


UPDATED : ஜூலை 23, 2026 06:05 PM

ADDED : ஜூலை 23, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 06:05 PM ADDED : ஜூலை 23, 2026 06:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக டில்லியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், தேர்வு குளறுபடிக்கு காரணமான மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், இந்திய மாணவர் சங்கத்தினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த நேற்று அஜந்தா சிக்னல் அருகே ஒன்று திரண்டனர்.

அங்கிருந்து மாணவர் சங்க தலைவர் ஸ்டீபன்ராஜ், செயலாளர் பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் பல்வேறு அரசு கல்லுாரி மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.

அவர்களை மிஷன் வீதி, எஸ்.வி.படேல் சாலை சந்திப்பில் பெரியக்கடை போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால், மாணவர்கள் போலீஸ் தடுப்புகளை மீறி கவர்னர் மாளிகையை நோக்கி செல்ல முயன்றதால், போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோரை குண்டுக் கட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி இந்திரா சதுக்கம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஹர்சவர்தன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்., இணை செயலாளர் பாலக்வர்மா, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, மகளிர் காங்., தலைவி நிஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us