மாணவர்கள் எந்த பாடப்பிரிவு எடுத்தாலும் சாதிக்கலாம் ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி டீன் நரேஷ்குமார் பேச்சு
மாணவர்கள் எந்த பாடப்பிரிவு எடுத்தாலும் சாதிக்கலாம் ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி டீன் நரேஷ்குமார் பேச்சு
ADDED : ஏப் 04, 2026 08:17 PM

புதுச்சேரி: மாணவர்கள் எந்த பாடப்பிரிவு எடுத்தாலும் சாதிக்கலாம் என, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி டீன் நரேஷ்குமார் பேசினார்.
புதுச்சேரியில் தினமலர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில், நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர், பேசியதாவது;
மாணவர்கள் எந்த பாடப்பிரிவு எடுத்தாலும் சாதிக்கலாம். கலை மற்றும் பொறியியல் துறைகளில் சாதிக்கலாம். நீங்கள் ஒரு கல்லுாரியில் தேர்வு செய்யும் பாடப்பிரிவு பதிவு செய்யப்பட்டதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி பதிவு செய்யாத பாடப்பிரிவுகளை நீங்கள் படித்தால், உங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். வணிகவியல் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். அதேபோன்று, ஏ.ஐ., பாடப்பிரிவுகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. வருங்காலங்களில் அறிவியல் பாடங்கள் எடுப்பதற்கான ஆசிரியர்கள் இல்லை. பொறியியல் துறையில் சிவில், கணினி அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை படிக்கலாம். ஒரு கல்லுாரியை தேர்வு செய்யும் முன் நல்ல கல்லுாரியா என விசாரிக்க வேண்டும். கல்லுாரியின் புரபைல் பார்க்க வேண்டும். அந்த கல்லுாரியின் வேலைவாய்ப்பு, ரிசல்ட், தகுதியான பேராசிரியர்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய வேண்டும்.
தகுதியான கல்லுாரியால் மட்டுமே, உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். அந்த கல்லுாரியில் இருந்து எத்தனை பேர் வேலைக்கு சென்றனர். அவர்கள் வாங்கும் சம்பளம் என்ன என்பதை விசாரிக்க வேண்டும். முக்கியமாக கல்லுாரியின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். கல்லுாரியின் துறைகளை ஆய்வு செய்து, அங்குள்ள பாடப்பிரிவுகள் தற்போதுள்ள டெக்னாலஜியுடன் ஒற்று போகிறதா என, பார்க்க வேண்டும். கம்ப்யூட்டர் லேப், ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்டவைகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.
பாடங்களை தவிர்த்து எக்ஸ்ட்ரா வேல்யூ ஆடடு கோர்ஸ் இருக்கிறதா என, பார்த்து கற்கொள்ள வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவை பொறுத்து தான் உங்கள் எதிர்காலம் இருக்கும். உங்களுக்கு பிடித்த பாடப்பிரிவுகளை எடுத்து படிக்க வேண்டும். பெற்றோர்களிடம் ஆலோசிக்க வேண்டும். உங்கள் திறமையை பொறுத்து தான் வளர முடியும். தினமலரின் இந்த அரிய முயற்சி அனைவருக்கும் நல்ல உறுதுணையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
