/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி: மாணவர்களுக்கு பாராட்டு
/
சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி: மாணவர்களுக்கு பாராட்டு
சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி: மாணவர்களுக்கு பாராட்டு
சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி: மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஏப் 07, 2025 06:21 AM

புதுச்சேரி; சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி மேற்கொண்ட, பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களை ஜான்குமார் எல்.எல்.ஏ., பாராட்டினார்.
புதுச்சேரி பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர் பிரஜன், இந்திய அரசியலமைப்பு அனைத்து பாகங்களையும், உறுப்புரைகளையும் 2நிமிடம் 4 வினாடிகளில் வாசித்தார். கவின்,நுாறில் இருந்து 2 வரையுள்ள இரட்டை எண்களை பின்னோக்கி 27 வினாடிகளில் கூறினார்.வினிஷ்மாதவன், ஏ. முதல் இசட் வரை ஆங்கில எண்களை 7 வினாடிகளில் தட்டச்சு செய்தார். நகுலன் 1 முதல் 50 வரை எண்களின் பெயர்களை இடது கையால், 7 நிமிடம் 25 வினாடிகளில் எழுதினார்.
மாணவர் தர்வின் 20 நாடுகளின் தேசிய கொடிகளுக்கு5 நிமிடம் 36 வினாடிகளில் வண்ணம் தீட்டினார்.அட்லின் ஜெரின் 50 மூன்றெழுத்து சொற்களை 2 நிமிடம், 13 வினாடிகளில் வேகமாக எழுதினார். லியாம் பெனடிக்ட் ஏ முதல் இசட் வரை ஆங்கில எழுத்துகளில் தொடங்கும் நாடுகளின் பெயர்களுடன், அந்நாட்டு தேசிய பழங்களின் பெயர்களை 44 வினாடிகளில் கூறினார்.
தஷ்வின் 100 கார் மாடல்களின் பெயர்களை 50 வினாடிகளில் கண்டறிந்தார். ஜெய்தக் ஷன் ஆவர்த்தன அட்டவணை கூறுகளை 1 நிமிடம் 15 வினாடிகளில் வாசித்தார். சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி செய்த 9 மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், ரிச்சர்ட்ஸ், அரசு உதவி வழக்கறிஞர் அருண் ஆகியோர் மாணவர்களை பாராட்டினார்.

