/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவர்கள் தர்ணா போராட்டம் நேரு எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
/
மாணவர்கள் தர்ணா போராட்டம் நேரு எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
மாணவர்கள் தர்ணா போராட்டம் நேரு எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
மாணவர்கள் தர்ணா போராட்டம் நேரு எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை
ADDED : பிப் 21, 2025 04:54 AM

புதுச்சேரி: ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்தாமல் இருந்தை கண்டித்து, மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மிஷன் வீதியில், பான்சியோனா அரசு பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி கட்டடத்தில், மதிய நேரங்களில், கல்வேக் காலேஜ், அரசு பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு, பயிலும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாடங்களை சரியாக எடுக்காமல் இருந்ததை கண்டித்து, பள்ளியில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி முன், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, உருளையன்பேட்டை தொகுதி, எம்.எல்.ஏ., நேரு பள்ளிக்கு சென்று, மாணவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். பின், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை அழைத்து, மாணவர்கள் படிப்பதற்கு போதிய ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகளிடம் பேசுவதாக கூறினார். அதையடுத்து, தர்ணா போராட்டத்தில், ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து வகுப்பறைக்கு சென்றனர். ஆசிரியர் சங்க தலைவர் நாராயணசாமி உடனிருந்தார்.