ADDED : செப் 21, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கல்லுாரி சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, 19. இவர், லாஸ்பேட்டை அரசு பெண்கள் தொழில்நுட்ப கல்லுாரியில் பி.இ., மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இவர், கடந்த 17ம் தேதி காலை 7:00 மணிக்கு வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீட்டிற்கு வரவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
