/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதகடிப்பட்டு வார சந்தையில் மாணவர்கள் சிறப்பு துப்புரவு பணி
/
மதகடிப்பட்டு வார சந்தையில் மாணவர்கள் சிறப்பு துப்புரவு பணி
மதகடிப்பட்டு வார சந்தையில் மாணவர்கள் சிறப்பு துப்புரவு பணி
மதகடிப்பட்டு வார சந்தையில் மாணவர்கள் சிறப்பு துப்புரவு பணி
ADDED : அக் 01, 2024 06:31 AM

திருபுவனை: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மதகடிப்பட்டு வார சந்தை வளாகத்தில் காமராஜர் அரசு கலைக்கல்லுாரி என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சிறப்பு துப்புரவுப் பணியை மேற்கொண்டனர்.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் உத்தரவின்பேரில் புதுச்சேரியில் அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் சுச்சாதா ஹி சேவா இரு வார தூய்மை பணிகள் நடந்து வருகிறது.
அதன்படி நேற்று மதகடிப்பட்டு வார சந்தை பகுதியில் சிறப்பு துப்புரவு பணியை ஆணையர் எழில்ராஜன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். காமராஜர் அரசு கலைக்கல்லுாரி என்.சி.சி., பொறுப்பாளர் கதிர்வேல், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவக்குமார். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலிதீர்த்தாள்குப்பம், காமராஜர் அரசு கலைக்கல்லுாரி என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி., 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சந்தை வளாகம் முழுவதும் தூய்மை பணி மேற்கொண்டனர்.
இவர்களுடன், ஹெச்.ஆர் ஸ்கொயர் தனியார் துாய்மை பணியாளர்கள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் இணைந்து பணியினை மேற்கொண்டனர்.
பல ஏக்கர் பரப்பளவில் அமைந்த சந்தை வளாகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் மல்லிகார்ஜுணன், மேற்பார்வையாளர் சச்சிதானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.