தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வினாடி – வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

வினாடி – வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

வினாடி – வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : செப் 29, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில், மண்டல அளவிலான வினாடி வினா போட்டி நடந்தது. அதில், குருசுக்குப்பம் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள் பாரிந்திரன், சோழமதி, தமிழ்செல்வம் ஆகியோர் இரண்டாம் இடத்தை பிடித்தனர். ஆலங்குப்பம் பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். தொடர்ந்து, நடந்த மாநில அளவிலான போட்டியில், குருசுக்குப்பம் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், ஆலங்குப்பம் பள்ளி மாணவர்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்வித் துறை இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன், வட்டம் 1 ஆய்வாளர் அனிதா, வட்டம் 2 ஆய்வாளர் செல்வி ஆகியோர் பாராட்டி, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். குருசுக்குப்பம் தலைமை ஆசிரியர் சீனுவாசன், ஆசிரியை அன்பரசி உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us