தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை

மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை


UPDATED : அக் 10, 2026 06:57 PM

ADDED : அக் 10, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 06:57 PM ADDED : அக் 10, 2026 06:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி சி.எஸ்.இ., துறை முதலாமாண்டு மாணவர்கள், தொழில்நுட்ப போட்டிகளில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழகக் கல்லுாரியில், ‘கம்பெஸ்ட்டா 2026’ என்ற தலைப்பிலான தொழில்நுட்பப் போட்டிகள் நடந்தது. இதில், மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு சி.எஸ்.இ., துறை மாணவர்கள், தங்களது தொழில்நுட்ப அறிவு, விரைவான சிந்தனைத் திறன், குழுப்பணி, தகவல் தொடர்புத் திறன் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் ஆற்றல் ஆகியவற்றை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

கியூ.ஆர்., குறியீடு தேடல் போட்டியில் அனுராதா, ஸ்ரீசஸ்மிதா ஆகியோரும், தொழில்நுட்பத் தடை என்ற தலைப்பிலான போட்டியில், மாணவர்கள் ரவ்பேந்திரன், லட்சுமி தேவி, அபிநயா ஆகியோரும் முதல் பரிசை வென்றனர்.

இவர்களை, மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், துணைச் செயலாளர் வேலாயுதம், முதல்வர் வெங்கடாசலபதி, கணினி அறிவியல் பொறியியல் துறைத் தலைவி தனபாக்கியம், கல்வியியல் புல முதன்மையர்கள் அன்புமலர், அறிவழகர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் புல முதன்மையர் வேல்முருகன், வேலைவாய்ப்புத் துறை புல முதன்மையர் கைலாசம், கணினி அறிவியல் பொறியியல் துறை ஒருங்கிணைப்பாளர் மாலதி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us