/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கல்லுாரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்க அழைப்பு
/
புதுச்சேரி கல்லுாரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்க அழைப்பு
புதுச்சேரி கல்லுாரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்க அழைப்பு
புதுச்சேரி கல்லுாரி மாணவர்கள் போட்டியில் பங்கேற்க அழைப்பு
ADDED : மார் 01, 2024 02:56 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், கல்லுாரி மாணவர்கள், பேச்சு மற்றும் வினாடி-வினா போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய மக்கள் தொடர்பக புதுச்சேரி துணை இயக்குநர் சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னையில் உள்ள இந்திய அரசின், மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், புதுச்சேரியில் 'மகளிர் சக்தி மகளிருக்கான தன்னுரிமைகளும் பாலின சமத்துவமும்' என்ற தலைப்பில், 6 நாட்கள் ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாம் வரும், 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை, சாய்பாபா திருமண மண்டபத்தில், நடக்கிறது.
இதையொட்டி அங்கு கல்லுாரி மாணவர்களுக்கு, 3 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், 'பெண்களால் சாதிக்கவும் முடியும்; விண்ணையும் எட்ட முடியும்' எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நாளை மறுதினமும், தேர்தல் குறித்த வீடியோ வினாடி - வினா போட்டி, வரும், 4ம் தேதியும், 'இந்தியாவின் பெண் தலைவர்களும், பெண் சாதனையாளர்களும்' எனும் தலைப்பில், வீடியோ வினாடி-வினா போட்டி வரும், 5ம் தேதியும் நடக்கிறது.
ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு - ரூ.5000; இரண்டாம் பரிசு - ரூ.3000; மூன்றாம் பரிசு - 2000 மற்றும் ஆறுதல் பரிசு - ரூ.500 வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியானது, புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித்திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட உள்ளது.
இந்த போட்டிகள், ஒவ்வொன்றிலும் ஒரு கல்லுாரியில் இருந்து, 3 மாணவர்கள் கலந்து கொள்ளலாம். கல்லுாரி அடையாள அட்டை மற்றும் கல்லுாரி முதல்வர், துறைத்தலைவரிடம் இருந்து போட்டியில் கலந்து கொள்வது குறித்து கடிதத்தை எடுத்து வர வேண்டும்.
இது குறித்து, 9443308376 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல்களை பதிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

