ADDED : பிப் 13, 2026 04:08 AM

காரைக்கால்: கல்லுாரி மாணவியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி காளிகுப்பம், சுனாமி நகரை சேர்ந்தவர் சோழராஜன் மகன் மதிபாலன்,21; இவர், கடந்த 2019ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்த 17 வயது மாணவியை காதலித்தார்.
மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக பழகியதில் மாணவி கர்ப்பமடைந்தார்.
அதன்பிறகு, மாணவியை திருமணம் செய்து கொள்ள மதிபாலன் மறுத்துவிட்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகா ரின் பேரில், மதிபாலனை கைது செய்த கோட்டுச்சேரி போலீசார், அவர் மீது காரைக்கால் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட சிறப்பு நீதிபதி மோகன், மதிபாலனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
