/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேக்வாண்டோ போட்டி காரை., மாணவர்கள் சாதனை
/
தேக்வாண்டோ போட்டி காரை., மாணவர்கள் சாதனை
ADDED : அக் 01, 2025 11:23 PM

காரைக்கால்:புதுச்சேரியில் நடந்த தேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்ற காரைக்கால் மாணவர்களை கலெக்டர் ரவிபிரகாஷ் பாராட்டினார்.
புதுச்சேரி லாஸ்பேட் உள்விளயைாட்டரங்கில் நடந்த மாநில தேக்வாண்டோ போட்டி நடந்தது. புதுச்சேரி, காரைக்கால் பகுதி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் காரைக்காலிருந்து பங்கேற்ற 14 மாணவர்கள் 2 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் வென்றனர்.
மேலும், இந்திரா காந்தி உள்விளயைாட்டரங்கில் நடந்த தேசிய தேர்வு சோதனையில் காரைக்காலில் இருந்து 7 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில், யூனிவர்சல் அகாடமி பள்ளி மாணவர் தருண் தேசியப் போட்டிக்குத் தேர்வானார்.
போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்கள், கலெக்டர் ரவிபிரகாைஷ சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, காரைக்கால் அத்திலீட் தேக்வாண்டோ சங்க பயிற்சியாளர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.