/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் கவுரவிப்பு
/
அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் கவுரவிப்பு
அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் கவுரவிப்பு
அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் கவுரவிப்பு
ADDED : ஜூன் 03, 2025 02:07 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.
புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக பிளஸ் 1 சேர்ந்த மாணவிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளியின் துணை முதல்வர் கலியமூர்த்தி, மாணவிகளை வரவேற்று இனிப்புகள் வழங்கினார்.
தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங் கப்பட்டன. பின்னர், அனைத்து பாடப்பிரிவிலும் முதலி டம் பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்கள் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தனர்.
ஆசிரியர் கவுரி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் அன்புமொழி, சாந்தா மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.