தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பறக்கும் படை அதிகாரிகளுடன் சப் கலெக்டர் ஆலோசனை

 பறக்கும் படை அதிகாரிகளுடன் சப் கலெக்டர் ஆலோசனை

 பறக்கும் படை அதிகாரிகளுடன் சப் கலெக்டர் ஆலோசனை


ADDED : மார் 13, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: திருபுவனை மற்றும் மண்ணாடிப்பட்டு தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் சப் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் முன்னிட்டு தேர்தல் துறை சார்பில் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் வில்லியனுார் தெற்கு துணை கலெக்டர் ஆலுவலகத்தில் திருபுவனை மற்றும் மண்ணாடிப்பட்டு தொகுதிகளை சேர்ந்த பறக்கும் படை அதிகாரிளுடன் சப் கலெக்டர் குமரன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் சப் கலெக்டர் குமரன் பேசியதாவது:

தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். அதிகாரிகள் பணம், பொருள் போன்றவற்றிக்கு அடிப்பணியக் கூடாது. தேர்தல் பணியில் ஈடுபடும் போது அரசியல்வாதிகள், பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள், ஓட்டுக்கு பணம் உள்ளிட்டவை கொடுப்பதை தடுக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லும் பணம், மது வகைகள், பரிசு பொருட்களை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும்.

தேர்தல் பணியில் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என, பறக்கும் படை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us