/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்பையா நினைவு தினம்; அரசு சார்பில் மரியாதை
/
சுப்பையா நினைவு தினம்; அரசு சார்பில் மரியாதை
ADDED : அக் 13, 2025 12:55 AM

புதுச்சேரி; சுப்பையா நினைவு தினத்தையொட்டி, அரசு சார்பில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லித்தோப்பு சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நேற்று அரசு சார்பில், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், ரமேஷ், சாய் சரவணன் குமார், லட்சுகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள், அனிபால் கென்னடி, வைத்தியநாதன், சம்பத், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், விசுவநாதன், கலைநாதன் ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், சி.பி.ஐ., நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்பையா, அந்தோணி, எழிலன், மா.கம்யூ., சார்பில் ராமச்சந்திரன், ராஜாங்கம், பெருமாள், சரவணன், ஜோதிபாசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.