/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்ரமணிய பாரதி பள்ளி சுதந்திர தின விழா
/
சுப்ரமணிய பாரதி பள்ளி சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 03:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா நடந்தது.
பள்ளியின் முதல்வர் சம்பத் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து , மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். துணை முதல்வர் சுசீலா சம்பத் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் வரவேற்றார்.
பள்ளியின் நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் முசினா பேகம், பவிஷா, கிரண்யா மற்றும் லிதிஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.