தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுப்ரமணிய பாரதி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

 சுப்ரமணிய பாரதி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை

 சுப்ரமணிய பாரதி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை


ADDED : மே 22, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 02:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

தேர்வு எழுதிய 147 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி அளவில் மாணவி சமிர்தா 500க்கு 490 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர்கள் நிறைமதி, சஞ்சித் ஆகியோர் 488 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவி பாவணாஸ்ரீ 487 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

பள்ளியில் 475 மதிப்பெண்களுக்கு மேல் 21 பேரும், 450க்கு மேல் 35 பேரும், 400க்கு மேல் 37 பேரும், 350க்கு மேல் 30 பேரும், 300க்கு மேல் 20 பேரும் பெற்றுள்ளனர்.

பாடவாரியாக, தமிழில் 11 மாணவர்கள் 98 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 4 மாணவர்கள் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 2 பேர் 99 மதிப்பெண்களும், அறிவியலில் 2 பேர் 100க்கு 100 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 5 பேர் 99 மதிப்பெண்களும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் நிர்வாகி சம்பத், துணை முதல்வர் சுசீலா சம்பத், நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

பள்ளி நிர்வாகி சம்பத் கூறுகையில், 'வரும் கல்வியாண்டில் எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டமும், 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டமும் பின்பற்றப்படுகிறது.

கிராமப்புறங்களில் எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதில் முதன்மை பள்ளியாக திகழ்ந்து வருகிறது.

இப்பள்ளி 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொடர்ந்து சாதனை புரிந்து வருவதற்கு ஒத்துழைப்பு நல்கி வரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றி' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us