தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தரமற்ற கழிவுநீர் வாய்க்கால் அமைப்பு; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

தரமற்ற கழிவுநீர் வாய்க்கால் அமைப்பு; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

தரமற்ற கழிவுநீர் வாய்க்கால் அமைப்பு; சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்


ADDED : ஜன 13, 2024 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2024 07:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார் : வில்லியனுார் அருகே தரமற்ற கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

வில்லியனுார் தொகுதி ஜி.என் பாளையம் மெயின் ரோட்டில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.40 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை, முத்துப்பிள்ளைபாளைம் மெயின்ரோடு வரையில் நடைபெறும் இந்த பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நடந்துவரும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியில் கலவை இயந்திரத்தில் நீரின் அளவு அதிகமாகி கான்கிரீட் கலவை தண்ணீராக வெளியேறும் வீடியோவை கிராம இளைஞர்கள் படம் பிடித்து அதனை சமூக வலைதளத்தில் வைரலாகி தரமற்ற கழிவுநீர் வாய்க்கால் அமைப்பதாக வலைதளத்தில் புகாராக வெளியிட்டுள்ளனர்.

சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை பொறியாளர் கள் குழுவினர் ஜி.என். பாளையத்தில் தரமற்ற முறை யில் செய்யப்படும் கழிவுநீர் அமைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்து வேலையை தரமாக செய்ய வலியுறுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us