/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி தலைமை செயலர் சண்டிகருக்கு அதிரடி மாற்றம்
/
புதுச்சேரி தலைமை செயலர் சண்டிகருக்கு அதிரடி மாற்றம்
புதுச்சேரி தலைமை செயலர் சண்டிகருக்கு அதிரடி மாற்றம்
புதுச்சேரி தலைமை செயலர் சண்டிகருக்கு அதிரடி மாற்றம்
ADDED : ஜன 31, 2024 01:10 AM
புதுச்சேரி:புதுச்சேரி தலைமை செயலர் ராஜிவ் வர்மா அதிரடியாக சண்டிகாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, அரசுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காமலும், முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாக ஆளும்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் வகித்து வந்த நிதித்துறை செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது, முதல்வருடன் கலந்தாலோசிக்காமல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததது.
இதைத் தொடர்ந்து, தலைமை செயலரை மாற்ற வேண்டும் என ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில், தலைமை செயலர் ராஜிவ் வர்மா சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில், தற்போது அருணாசல பிரதேசத்தில் பணிபுரியும் 1994பேட்ஜ் அதிகாரி சரத் சவுகான் புதுச்சேரி தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை உள்துறை இயக்குனர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.