/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு
/
பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு
பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு
பாகூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் திடீர் பரபரப்பு
ADDED : நவ 06, 2024 07:05 AM

பாகூர் : பாகூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி., மூலமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள், பொது இடங்களில், மக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கட் அவுட்கள் கலெக்டர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாகூரில் நேற்று சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.
பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் தலைமையில், கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன், பாகூர் பூலோக மாரியம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கி கன்னியக்கோவில் வீதியில் சாலையோர கடைகள், படிக்கட்டுகள், தடுப்பு கட்டைகளை ஜே.சி.பி., வாகனம் மூலமாக இடித்து அப்புறப்படுத்தினர்.
இதனால், பாகூரில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.