ADDED : ஆக 04, 2026 03:06 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை காலம் முடிந்த நிலையில் புதுச்சேரியில் தொடர்ந்து வெயில் சதம் அடித்து வருகிறது. வெயிலின் தாக்கதால் பள்ளி கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் தினந்தோறும் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயிலால் மதிய நேரத்தில் சாலைகளில் அனல் காற்று வீசி வருகிறது.
கடும் வெயில் காரணமாக விடுமுறை நாட்களில் சுற்றுலா தளங்களில் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு கோடை மழை சரியாக பெய்யாததால் வறட்சி நிலவி வருகிறது.
கோடை காலத்திற்கு பிறகு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லேசான மழை பெய்தது.
இந்நிலையில், திடீரென கருமேகம் சூழ்ந்து புதுச்சேரி பகுதிகளில் நேற்று மாலை கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த மழையால், சாலைகளில் மழைநீர் ஓடியது. பணியில் இருந்து வீட்டுக்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
