/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சின்னகாலாப்பட்டில் திடீர் கடல் அரிப்பு
/
சின்னகாலாப்பட்டில் திடீர் கடல் அரிப்பு
ADDED : நவ 15, 2025 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி, சின்ன காலாப்பட்டு குப்பம் பகுதியில் கடந்த 2 நாட்களில் 20 மீட்டருக்கு மேல் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் உட்பு குந்துள்ளது.
இதனால் மீனவர்கள் படகுகளை பாதுகாக்க முடியாமல் உள்ளனர். இப்பகுதியில் கடல் அரிப்பை தடுக்க நிரந்தரமாக துண்டில் முள்வளைவு அமைக்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன், இப்பகுதியில் பெய்த மழை காரணமாக படகுகள் அடித்து செல்லப்பட்டதில் ரூ. 1 கோடி வரை சேதம் ஏற்பட்டது.
இதற்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை. அதற்குள் அடுத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

