/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., அதிகாரிகளை ஊழியர்கள் சிறைபிடித்ததால் திடீர் பரபரப்பு
/
பி.ஆர்.டி.சி., அதிகாரிகளை ஊழியர்கள் சிறைபிடித்ததால் திடீர் பரபரப்பு
பி.ஆர்.டி.சி., அதிகாரிகளை ஊழியர்கள் சிறைபிடித்ததால் திடீர் பரபரப்பு
பி.ஆர்.டி.சி., அதிகாரிகளை ஊழியர்கள் சிறைபிடித்ததால் திடீர் பரபரப்பு
ADDED : நவ 23, 2024 05:38 AM
புதுச்சேரி : போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.டி.சி., ஊழியர்களுக்கு பணி வழங்காததை கண்டித்து, தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி, பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேரு எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் நிர்வாகம் பொது மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்று பணிக்கு திரும்பிய போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் உதவி மேலாளர் குழந்தைவேலு, இனி போராட்டம் நடத்த மாட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதி தந்தால் மட்டுமே, மீண்டும் பணி வழங்க முடியும் என கூறியதாக தெரிகிறது.
இதைகண்டித்து, அரசு ஊழியர்கள் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் நேற்று மாலை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அதிகாரிகள் பணி முடிந்து வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், மேலாளர் ராதாகிருஷ்ணன், பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும், மன்னிப்பு கடிதம் ஏதுவும் கொடுக்க வேண்டாம் என தெரிவித்தார்.
அதன்பின், ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.