/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சர்க்கரை ஆலை மீண்டும் நடத்தப்படும்: முதல்வர்
/
சர்க்கரை ஆலை மீண்டும் நடத்தப்படும்: முதல்வர்
ADDED : பிப் 15, 2024 04:37 AM
திருக்கனுார் : கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் நடத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
காட்டேரிக்குப்பம் அரசு பள்ளியில் நடந்த மாணவர்களுக்கான மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
அரசு அறிவித்த எல்லா திட்டங்களை செய்து வருகிறது. அதில் ஒன்று தான் மாலை நேர சிற்றுண்டி திட்டம் ஆகும்.
சத்தான உணவை சாப்பிட்டால் மருத்துவத்திற்கு செலவிட வேண்டாம். அதற்காகத்தான் சிறுதானியம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
நலிந்த பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், சர்க்கரை ஆலைகள் நிமிர்த்த முடியாத அளவுக்கு நஷ்த்தில் சென்றுவிட்டதால் அதனை மீண்டும் கொண்டுவர முடியவில்லை.
இருந்தாலும் எந்தெந்த நிறுவனங்களை நடத்த முடியும் அரசு முயற்சி எடுத்து வருகிறது.
புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து நடத்த வேண்டியது மிக அவசியமானது. அதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டு, ஆலையை திறந்து எவ்வாறு நடத்த வேண்டும் என்று ஆலோசனை பெற்று நடத்த முயற்சிகள் எடுக்கப்படும்.
எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எத்தனால் உற்பத்தி செய்து, நல்ல முறையில் ஆலையை திறந்து நடத்த வேண்டும் என்று அரசு உறுதியாக இருக்கிறது.
விரைவில் திறந்து நடத்தப்படும். என்றார்.

