/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உழவர்கரை தொகுதியில் கரும்பு வழங்கல்
/
உழவர்கரை தொகுதியில் கரும்பு வழங்கல்
ADDED : ஜன 12, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உழவர்கரை தொகுதி மக்களுக்கு கரும்பு வழங்கும் பணியை என்.ஆர்.காங்., பிரமுகர் டாக்டர் நாராயணசாமி கேசவன் துவக்கி வைத்தார்.
உழவர்கரை தொகுதியில் மணக்குள விநாயகர் கல்விக் குழும செயலரும், என்.ஆர்.காங்., பிரமுகருமான டாக்டர் நாராயணசாமி கேசவன், தமிழர் பாரம்பரிய பண்டிகையை போற்றும் வகையில், தொகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கரும்பு வழங்கி, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக பாவாணர் நகரில் உள்ள ஜலகண்ட முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நிகழ்ச்சியில், ஊர் முக்கியஸ்தர்கள், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

