/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் கல்லுாரில் பாடத் திட்டத்தை முறைப்படுத்த ஆலோசனை
/
தாகூர் கல்லுாரில் பாடத் திட்டத்தை முறைப்படுத்த ஆலோசனை
தாகூர் கல்லுாரில் பாடத் திட்டத்தை முறைப்படுத்த ஆலோசனை
தாகூர் கல்லுாரில் பாடத் திட்டத்தை முறைப்படுத்த ஆலோசனை
ADDED : டிச 06, 2025 05:27 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரியில் பாடத்திட்டம் முறைப்படுத்தும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கு, பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்றதால், மாணவர்களுக்கு கல்விபாடத்தினை கல்லுாரி நிர்வாகமே மாற்றி அமைக்கலாம்.
அதன்படி கல்லுாரிகளில் இயங்கி வரும் 17 துறைகளில் கல்வி பாடத்திட்டம் முறைப்படுத்தும் குழு கூட்டம், துறை தலைவர்களின் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கல்லுாரி முதல்வர் கருப்புசாமி, நோடல் அதிகாரி நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேதியியல் துறை தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 8 பேர் கொண்ட குழு கல்வி வழிகாட்டுதல் முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.