தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மரில் தற்கொலை தடுப்பு கருத்தரங்கம் 

ஜிப்மரில் தற்கொலை தடுப்பு கருத்தரங்கம் 

ஜிப்மரில் தற்கொலை தடுப்பு கருத்தரங்கம் 


ADDED : செப் 10, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு, ஜிப்மர் காரைக்கால் மனநல மருத்துவ துறை சார்பில் தற்கொலை தடுப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

ஜிப்மர் காரைக்கால் கல்லுாரி முதல்வர்  பாலமுருகன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவமனையின் பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்களிடையே தற்கொலைத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. 

சமூக மருத்துவத் துறை டாக்டர் கார்த்திக் பாலாஜி, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறை டாக்டர் நந்தினி சரவணன், குழந்தைகள் நலத் துறை டாக்டர் ஜெயராஜ், பொது மருத்துவத் துறை டாக்டர் பரத்ராஜ், தோல் மருத்துவத் துறை டாக்டர் அபிராமி ஆகியோர் பங்கேற்று தற்கொலை எண்ணங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்புகள், வெளிப்படையாகத் தெரியும் நோய்களின் உளவியல் தாக்கம் . நோயாளிகளுடன் உரிய முறையில் உரையாடும் முறைகள் குறித்து விளக்கினர்.

நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மேலும், தற்கொலைத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவ மாணவர்களுக்கு குறும்படம் மற்றும் பாட்காஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை மனநல மருத்துவத் துறை பொறுப்பாளர்  தினேஷ் செய்திருந்தார். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us