/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சுமங்கலி பூஜை
/
வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சுமங்கலி பூஜை
ADDED : ஜன 19, 2024 10:58 PM

புதுச்சேரி, -புதுச்சேரி, மகிளா சங்கம் சார்பில் தை வெள்ளியையொட்டி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சுமங்கலி (ஒடிபால்) பூஜைகள் நடத்தப்பட்டன.
இதையொட்டி, நேற்று மதியம் 12:15 மணியளவில் 108 பொருட்கள் அடங்கிய பைகளுடன் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சகஸ்ரநாமம் மற்றும் குங்கும அர்ச்சனை, தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், பூஜையில் கலந்து கொண்ட 108 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, மகிளா சங்க தலைவி சத்யா ரமேஷ்பாபு முன்னிலையில், செயலாளர் இந்திராணி சந்திரசேகர், பொருளாளர் பாக்கியலட்சுமி ரமேஷ் குப்தா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.