/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.எம்.வி.பள்ளியில் கோடை பயிற்சி நிறைவு
/
எஸ்.எம்.வி.பள்ளியில் கோடை பயிற்சி நிறைவு
ADDED : மே 17, 2025 11:25 PM

புதுச்சேரி: மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி., பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.எம்.வி. பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்புகள் கடந்த 5ம் தேதி தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. அதில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிற்சி, யோகா, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம், கட்டடக்கலை பயிற்சி, ஏ.ஐ. தொழில்நுட்பம், ட்ரோன் செயல் விளக்கம், கூடைப்பந்து, சுடுமண்சிற்ப கைவினைப் பொருட்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
அதன் நிறைவு நாளில் பயிற்சியில் பங்கேற்று மாணவர்கள் உருவாக்கிய கட்டடக்கலை வரைபட மாதிரி மற்றும் சுடுமண் சிற்ப மண்பாண்ட படைப்புகள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளியின் இணை செயலர் வேலாயுதம், பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் கோடைகால பயிற்சி சான்றிதழ்களை வழங்கினர்.
ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் துணை முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.