தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

 ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

 ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்


ADDED : மே 06, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில், 9 இடங்களில் நடக்கும் கோடைகால பயிற்சி முகாமில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகினறனர்.

கோடை விடுமுறையை யொட்டி, பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் ஜவகர் சிறுவர் இல்லம் குழந்தைகளுக்காக பல்வகைக் கலைகளான பரதம், கிராமிய நடனம், வாய்ப்பாட்டு இசை, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம், கைவினை, கிதார், கீபோர்டு, டிரம்ஸ், தேக்வாண்டோ மற்றும் விளையாட்டு (கேரம், செஸ், இறகுபந்து, டேபிள் டென்னிஸ்) ஆகியவற்றைக் கற்பிக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அதன்படி, ஜவகர் சிறுவர் இல்லம், லாஸ்பேட் கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காலாப்பட்டு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி, திருவண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாகூர் அரசு நடுநிலைப்பள்ளி, கரியமாணிக்கம் அரசு நடுநிலைப்பள்ளி, நோனாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 9 இடங்களில் 2ம் தேதி துவங்கிய பயிற்சி முகாம் 31ம் தேதி வரை நடக்கிறது. முகாமில், 6 வயது முதல் 16 வயதுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us