புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஏப்.27 முதல் கோடை விடுமுறை
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஏப்.27 முதல் கோடை விடுமுறை
ADDED : ஏப் 22, 2026 08:10 PM
புதுச்சேரி: கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால், புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 27ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மாகியில் இன்று (23ம் தேதி) முதல் மே மாதம் 31ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வரும் 27ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சிறப்பு வகுப்பு உட்பட எந்த ஒரு வகுப்புகளும் நடத்தக் கூடாது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
ஏப்ரல் 30ம் தேதி வரை, பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த விடுமுறை நாட்களை, பள்ளி திறப்பிற்கு பிறகு ஈடுசெய்யப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
