தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பாலியல் வழக்கு எஸ்.பி.,க்கு சம்மன்

பாலியல் வழக்கு எஸ்.பி.,க்கு சம்மன்

பாலியல் வழக்கு எஸ்.பி.,க்கு சம்மன்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் மாவட்டத்தில் எஸ்.பி., சுப்ரமணியன் பணி புரிந்தபோது, அங்கு திருமணமான 28 வயது பெண் போலீசுடன் பழக்கம் ஏற்பட்டது. பின் சுப்ரமணியன் புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பெண் காவலருக்கு எஸ்.எம்.எஸ்., வீடியோ கால், ரகசிய உரையாடல்கள், புகைப்படங்கள் மொபைல் போனில் இருந்ததை கண்டு பெண் போலீசின் கணவனர் அதிர்ச்சியடைந்தார்.

இதனால் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றார். அவரது கணவர் புகாரின் பேரில் விசாரணை குழு அமைக்கப்பட்டு, பெண் காவலர், அவரது தாய், கணவன் மற்றும் உடன் பணியாற்றிய சக போலீஸ் ஊழியர்களை தனித்தனியாக விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் எஸ்.பி., சுப்ரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பெண் போலீசின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி., மீது மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, உத்தரவின் பேரில், சுப்ரமணியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாலியல் வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்.பி.சுப்ரமணியனை விசாரிக்க நகர இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வன் தலைமையில் கொண்ட போலீஸ் குழுவினர் சமன் அனுப்பியுள்ளது.

இவ்வழக்கில் எஸ்.பி.,க்கு உடந்தையாக சில போலீசார் பணியாற்றியதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us