sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஞாயிறு: ஜூலை-30 தியாகிகள் தினம் ஆசியாவிலேயே 8 மணி நேர வேலையை பெற்று தந்த புதுச்சேரி

/

ஞாயிறு: ஜூலை-30 தியாகிகள் தினம் ஆசியாவிலேயே 8 மணி நேர வேலையை பெற்று தந்த புதுச்சேரி

ஞாயிறு: ஜூலை-30 தியாகிகள் தினம் ஆசியாவிலேயே 8 மணி நேர வேலையை பெற்று தந்த புதுச்சேரி

ஞாயிறு: ஜூலை-30 தியாகிகள் தினம் ஆசியாவிலேயே 8 மணி நேர வேலையை பெற்று தந்த புதுச்சேரி


ADDED : ஜூலை 27, 2025 12:13 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, கடலுார் சாலை சுதேசி மில்லையொட்டி மூன்று தொழிலாளர்கள், பல்சக்கரம், தறி நாடா மற்றும் உதிரி பாகங்களை கையில் ஏந்தியபடி வீரத்தோடு ஆயுதப் படையை எதிர்த்து நிற்பது போன்ற சிலையை பார்த்து பலரும் கடந்து போயிருக்கலாம்.

இந்த நினைவு சின்னத்திற்கு பின்னால் புதுச்சேரி தொழிலாளர்களின் வீரமிக்க உயிர் தியாகம் செய்த போராட்ட வரலாறும்,8 மணி நேர வேலை உரிமை மீட்புக்காக அவர்களின் சிந்திய ரத்த தியாகமும் மவுனமாக புதைந்து கிடைக்கின்றது.

அந்த காலத்தில் உழைப்பு சுரண்டல் அதிகம். சூரிய உதயத்திற்கு முன் வேலைக்குசெல்லும் புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளர்கள் சூரியன் மறைவுக்கு பின் தான் வீடு திரும்ப முடியும். அன்றாடம் 14 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. அடிமட்ட கூலி, கடுமையான அடக்கு முறைகள் அதிகமாக இருந்தது. இந்த அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராக புதுச்சேரி தொழிலாளர்கள் கொந்தளித்து ஓரணியில் திரண்டனர்.

1936 ஜூலை 30ம் தேதி அதற்கான நாளாக அமைந்தது. அன்று சவானா மில் தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமைக்காக வெளியேற மறுத்துஉச்சக்கட்டமாக உள்ளிருப்பு போராட்டம் துவங்கினர்.கடும் கோபம் கொண்ட பிரெஞ்சு அரசு பீரங்கி, துப்பாக்கிகளோடு ராணுவத்தால் ஆலையை சுற்றி வளைத்தது.ரோடு ரோலர் கொண்டு சுற்றுச்சுவரை இடித்து உள்ளே நுழைந்தது. தொழிலாளர்கள் கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்து ராணுவம், போலீசார் மீது வீசி எறிந்தனர்.

ஆத்திரமற்ற ராணுவமும், போலீசும், தொழிலாளர்கள் மீது சுழல் துப்பாக்கிகளை சுழல விட்டு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொழிலாளர்கள் சிதறி ஓடினர்.

ஆனால்ராணுவமும், போலீசும் விடவில்லை. தங்களிடமிருந்த கடைசி குண்டு தீர்த்து போகும் வரை தொழிலாளர்கள் நோக்கி குண்டு மழை பொழிந்தது. மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் துறந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு போனதில் மேலும் 9 தொழிலாளர்கள் மரணம் அடைந்தனர். அன்றைய துப்பாக்கிச்சூட்டில் 12 தொழிலாளர்கள் தமது இன்னுயிரை இழந்து தியாகிகளாகினர். பலர் கை, கால் உடல் உறுப்புகளை இழந்தனர்.

அன்றைய ஜூலை 30 தேதி புதுச்சேரியின் கருப்பு நாளாகவும், துயர நாளாகவும் அமைந்தது. புதுச்சேரியின் பிரதான சாலையான கடலுார் சாலை ரத்தம் தோய்ந்தது.

அதை தொடர்ந்து பெரும் கலவரம் வெடித்தது. தொழிலாளர்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை ஏந்தி கொண்டு, சுட்டுக் கொண்டிருக்கும் துப்பாக்கியை நோக்கி, ராணுவம் மற்றும் போலீசாருக்கு எதிராக முன்னேறினர். உயிருக்கு அஞ்சாத தொழிலாளர்களின் எழுச்சி கண்டு, ராணுவமும் போலீசும் திரும்பி ஓடின. அவர்களை மேற்கு பொலிவார் வரை தொழிலாளர்கள் துரத்தி அடித்தனர்.

ஒரு ஆயுதப்படை துப்பாக்கியோடு வருகிறது என்று அந்த தொழிலாளர்கள் அச்சம் அடையவில்லை. மாறாக ஓட ஓட விரட்டினர். தமது தோழர்கள் 12 பேர், தங்கள் கண் முன்னே சுடப்பட்டு செத்து கிடந்ததை பார்த்து ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் சவானா ஆலைக்கு தீ வைத்தனர். தொழிலாளர்கள் நெஞ்சில் எழுந்த கனல் போலவே ஆலையின் கிடங்கில் எரிந்த நெரும்பும் வெகுநாட்களாக எரிந்து கொண்டிருந்தது.

இச்சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன. பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் இப்பிரச்னை எதிரொலித்தது. அதையடுத்து 1937-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுச்சேரி தொழிலாளர்களுக்கான 8 மணி நேர வேலை உரிமைச் சட்டமும், தொழிற்சங்கம் உரிமைச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் 1937ம் ஆண்டிலிருந்து ஆசியாவில் முதல் முறையாக புதுச்சேரியில் 8 மணி நேர வேலை அமலாக்கப்பட்டது.

இந்த உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக தான்சவானா மில் நுழைவு வாயில் இருந்த இடத்தில் ஏ.ஐ.டி.யூ.சி., இந்த நினைவு சின்னம் எழுப்பியிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ல் இச்சம்பவத்தினை நினைவு கூறும் வகையில், பல்வேறு தொழிற்சங்கத்தினர் பஸ் ஸ்டாண்டில் இருந்துஊர்வலமாக, சிலையை நோக்கி சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.சரியாக காலை ஒன்பது மணிக்கு, மில் நிர்வாகம் சங்கு ஒலிக்கச் செய்யும். சிலையின் காலடியில் முதல் மலர்வளையம் வைக்கப்படும். முழு மவுன அஞ்சலி. மூன்று நிமிடம் கழித்து மறுபடியும் சங்கு ஒலிக்கும். பின்னர் ஒவ்வொரு அமைப்பாக வந்து மலர் அஞ்சலி செலுத்துகின்றனர். இந்தாண்டு வரும் 30ம் தேதி தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட உள்ளது.

உயிர் தியாகம் செய்த தியாகிகள்

அமலோர்ப்பநாதன், ராஜமாணிக்கம் கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன், சின்னையன், பெருமாள் , வீராச்சாமி, மதுரை, ஏழுமலை, குப்புசாமி, ராஜகோபால்








      Dinamalar
      Follow us