சட்டசபை தேர்தலுக்கு பின் களை கட்டிய 'சண்டே மார்கெட்'
சட்டசபை தேர்தலுக்கு பின் களை கட்டிய 'சண்டே மார்கெட்'
ADDED : ஏப் 12, 2026 10:24 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி தேர்தலுக்கு பிறகு சண்டே மார்கெட்டில் பொருட்களை வாங்க குவிந்த மக்களால் விற்பனை களை கட்டியது.
புதுச்சேரி காந்தி வீதி சண்டே மார்க்கெட், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் புகழ்பெற்ற வாராந்திர சந்தையாகும். இது மலிவு விலையில் ஆடைகள், பழைய புத்தகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை வாங்க உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் கூடும் இடமாக உள்ளது.
புதுச்சேரி சட்டசபை தேர்தலால் சண்டே மார்கெட் சற்று ஓய்ந்தது. இந்நிலையில், தேர்தல் முடிந்து, சண்டே மார்கெட்டில் பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் சண்டே மார்க்கெட் களை கட்டியது. திரளான மக்கள், சுற்றுலா பயணிகள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
