/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேதமடைந்த வீட்டின் சன் ைஷடு அகற்றம்
/
சேதமடைந்த வீட்டின் சன் ைஷடு அகற்றம்
ADDED : நவ 14, 2024 07:29 AM

புதுச்சேரி; கவர்னர் மாளிகை அருகே சேதமடைந்த பழமையான வீட்டின் முன்பக்க சன் ைஷடுகளை தீயணைப்பு துறையினர் நேற்று அகற்றினர்.
புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகே ரோமண்ட் ரோலண்ட் நுாலகம் பின்புறம் உள்ள செயின்ட் லுாயிஸ் வீதியை சேர்ந்தவர் பட்டாச்சார்யா, 70. இவரது பழமையான வீட்டின் முதல்மாடியில் இருந்த சன்ைஷடு சிலாப் (முகப்பு) விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து இருந்தது.
நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக, சேதமடைந்த சன்ைஷடு நேற்று காலை திடீரென உடைந்து, வீட்டின் வாசல் எதிரே தொங்கிக் கொண்டிருந்ததால், விபத்து அபாயம் நிலவியது.
தவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, உடைந்து தொங்கிக் கொண்டிருந்த சன்ைஷடை முழுமையாக உடைத்து அகற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

