/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீன் விற்பனையாளர்களுக்கு குளிர்சாதன பெட்டி வழங்கல்
/
மீன் விற்பனையாளர்களுக்கு குளிர்சாதன பெட்டி வழங்கல்
மீன் விற்பனையாளர்களுக்கு குளிர்சாதன பெட்டி வழங்கல்
மீன் விற்பனையாளர்களுக்கு குளிர்சாதன பெட்டி வழங்கல்
ADDED : மார் 13, 2026 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: காட்டேரிக்குப்பத்தில் மீன் விற்பனையாளர்களுக்கு இலவச குளிர்சாதன பெட்டியை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்.
காட்டேரிக்குப்பம் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த மீன் விற்பனையாளர்களுக்கு மீன்வளத்துறையின் கடற்கரையோர அடிப்படை வசதிகள் வழங்குதல் திட்டத்தின் கீழ், இலவச மீன் குளிர்சாதன பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, 21 மீன் விற்பனையாளர்களுக்கு இலவச மீன் குளிர்சாதன பெட்டியை வழங்கினார். இதில், மீனவ சங்க தலைவர் சங்கர், பா.ஜ., நிர்வாகிகள் சிவக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.