ADDED : நவ 13, 2024 08:58 PM

அ நிறம் | அளவு
வில்லியனுார்; ஊசுடு தொகுதியில் இலவச அரிசி மற்றும் சர்க்கரையை அமைச்சர் சாய்சரவணன் குமார் வழங்கினார்.
புதுச்சேரி அரசு, குடிமைப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட கூடப்பாக்கம், சேந்தநத்தம், அரசூர் மற்றும் குருமாம்பேட் உள்ளிட்ட பகுதி ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ இலவச அரசி மற்றும் 2 கிலோ சர்க்கரையை அமைச்சர் சாய்சரவணகுமார் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தொகுதி பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் சாய்தியாகராஜன், தொகுதி தலைவர் அய்யனார், பொதுச் செயலாளர் சங்கர், முரளி வாழுமுனி, குப்புசாமி, பாலமுருகன், பாலகிருஷ்ணன், குமார், ஜெகன், மணிமாறன், அஜித், ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
