/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு துவக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல்
/
அரசு துவக்கப் பள்ளிக்கு ஸ்மார்ட் டிவி வழங்கல்
ADDED : செப் 26, 2024 03:18 AM

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம், அருந்ததிபுரம் அரசு துவக்கப் பள்ளியில், ஸ்மார்ட் டி.வி. மற்றும் மாணவர்களுக்கு இலவச சீருடையை எதிர்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாநில அமைப்பாளர் சங்கர் என்கிற சிவசங்கரன் ஏற்பாட்டில், பள்ளிக்கு ஸ்மார்ட் டி.வி., மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நேற்று நடந்தது.
தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஸ்மார்ட் டி.வி. மற்றும் மாணவர்களுக்கு சீருடை, நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, ஆசிரியர்கள் பழனிராஜ், சுதா, தி.மு.க., தொகுதி செயலாளர் சீத்தாராமன், அவைத் தலைவர் பாண்டியன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வேலன், தொகுதி துணைச் செயலாளர் சிலம்பு செல்வன், அணிகளின் துணை அமைப்பாளர்கள் தியாகராஜன், நாகூர் மீரான், ஜெயபாலன், மதிவாணன், ஜபருல்லா, வெங்கடேசன், ரபேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

