தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சி.சி.டி.வி., கேமராக்கள் எஸ்.பி.,யிடம் வழங்கல்

சி.சி.டி.வி., கேமராக்கள் எஸ்.பி.,யிடம் வழங்கல்

சி.சி.டி.வி., கேமராக்கள் எஸ்.பி.,யிடம் வழங்கல்


ADDED : செப் 18, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2026 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி முழுவதும் முக்கிய வழிதடங்களில் கேமராக்கள் பொருத்த ரவிக்குமார் எம்.எல்.ஏ., மேற்கு பகுதி எஸ்.பி., யிடம் கேமராக்களை வழங்கினார்.

வில்லியனுார் வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது. வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகர், மேற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணியன், போக்குவரத்து, மகளிர் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் கலந்துகொண்டனர்.

இதில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டு, மாமூல் பிரச்னைகள், டிரேட் லைசன்ஸ் பிரச்னைகள், வில்லியனுார் மாட வீதியில் சாலையோர கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்,   உள்ளிட்ட பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

வியாபாரிகள் தெரிவித்த பிரச்னைகள் விரைவில் சுமுகமாக தீர்த்துவைப்பதாக ரவிக்குமார் எம்.எல்.ஏ., உறுதியளித்தார். தொடர்ந்து குற்ற செயல்கள் தொகுதியில் நடக்காமல் பாதுகாக்கும் வகையில், ரவிக்குமார் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில், நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட 170 சி.சி.டி.வி., கேமராக்களை தொகுதியில் முக்கிய வழிதடங்களில் பொருத்த மேற்கு பகுதி எஸ்.பி., சுப்ரமணியிடம் வழங்கினார். 

நிகழ்ச்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us