/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எதிர்கட்சிகளிடம் அனுசரணையாக இருப்பது கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: அன்பழகன்

ADDED : ஏப் 10, 2025 04:16 AM

புதுச்சேரி: அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடந்தது.
உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், புதுச்சேரியில் காங்., தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பா.ஜ.,விற்கும், முதல்வருக்கும் ஆதரவாகவும் உள்ளனர். அரசும் தி.மு.க., காங்., எம்.எல்.ஏ.,களுக்கு அனுசரணையாக நடந்து வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருட காலமே இருக்கும் சூழ்நிலையில், அரசு எதிர்க்கட்சிகளிடம் அனுசரணையாக நடக்கும் சூழல் தேவையற்றதாகும். அது தேர்தலில் ஆளும் அரசின் கூட்டணிக்கு நிச்சயம் எதிர்வினைகளை ஏற்படுத்தும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் நம்மோடு இருப்பவர்கள் யார், நமக்கு துணை நிற்பவர்கள் யார், யார் நமக்கு எதிரியாக செயல்படுவர் என உணர்ந்து அரசை நடத்த வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், கணேசன், திருநாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணைச் செயலாளர்கள் கருணாநிதி, குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் அன்பழகன், மாநில நிர்வாகிகள் தமிழ்வேந்தன், சுத்துக்கேணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜானிபாய், பாலன், சிவராமராஜா, செந்தில்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.