தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சூரசம்ஹார விழா இன்று துவங்குகிறது

சூரசம்ஹார விழா இன்று துவங்குகிறது

சூரசம்ஹார விழா இன்று துவங்குகிறது


ADDED : நவ 01, 2024 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி சித்தி விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று துவங்குகிறது. நாளை 2ம் தேதி காலையில் கொடியேற்றம், இரவு சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும், 7ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, தாரகா சூரன் புறப்பாடும், இரவில் புஷ்ப விமானம், சூரசம்ஹாரம், தங்கமயில் வாகன புறப்பாடும் நடக்க உள்ளது.

வரும் 8ம் தேதி காலை 9:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும், 12ம் தேதி, 108 சங்காபிேஷகத்தோடு விழா நிறைவு பெறுகிறது.

அதேபோல, பெத்துசெட்டிப்பேட்டை, சித்தி விநாயகர் சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி வரும், 2ம் தேதி இரவு சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

அடுத்தடுத்த தினங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. வரும், 5ம் தேதி பகலில், தாரகா சூரன் வீதி உலா; இரவு 8:00 மணிக்கு, தாரகா சூரன் சம்ஹாரம் நடைபெறுகிறது.

அடுத்த நாள் பகலில் சிங்க முகா சூரன் வீதி உலாவும், இரவில் வேல் வாங்குதலும், சிங்கமுகா சூரன் சம்ஹாரமும் நடக்கிறது. வரும், 7ம் தேதி கம்பம் நாட்டுதல் மற்றும் சூரபத்மன் நகர் உலா சூரபத்மன் சம்ஹாரமும், சுவாமி வெள்ளி மயில் வாகன வீதி உலா நடைபெறுகிறது.

வரும் 8ம் தேதி சுவாமி திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. வரும், 12ம் தேதி வேல் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us