/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பயிற்சி
/
அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பயிற்சி
ADDED : பிப் 15, 2025 07:17 AM

புதுச்சேரி : காது, மூக்கு, தொண்டை சிகிச்சை சிறப்பு நிபுணர்களுக்கு அறுவை சிகிச்சை தொடர்பான பயிற்சி முகாம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நடந்தது.
புதுச்சேரி சுகாதார இயக்கத்தின் தேசிய காது கேளாண்மை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு நிபுணர்களுக்கான அறுவை சிகிச்சை தொடர்பான இரண்டு நாள் பயிற்சி முகாமை சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.
தேசிய சுகாதார துறை திட்ட அதிகாரி கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.
மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், இ.என்.டி. துறை தலைவர் ஸ்டாலின் சிவகுருநாதன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த 80 டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் காது நோய்களுக்கான அறுவை சிகிச்சை முறைகள், அதில் இருக்கும் நவீன சிகிச்சை முறைகள் பற்றி ஜிப்மர் காது, மூக்கு, தொண்டை பிரிவு தலைவர் சிவராமன், வெங்கடேஸ்வரா மருத்துவமனை டாக்டர் பிரபு, மகாத்மா காந்தி மருத்துவமனை டாக்டர் கார்த்திகேயன், லட்சுமி நாராயண மருத்துவமனை டாக்டர் கீதா, பிம்ஸ் மருத்துவமனை சித்தானந்த் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் குறைதீர் அதிகாரி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.