/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாயமான தாய், மகளிடம் ஒப்படைப்பு
/
மாயமான தாய், மகளிடம் ஒப்படைப்பு
ADDED : நவ 20, 2024 05:58 AM
காரைக்கால் : காரைக்கால் நெடுங்காடு பகுதியில் மனவளர்ச்சி குன்றிய தாயை அவரது மகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
காரைக்கால் நெடுங்காடு பகுதியில் சப்.இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுப்பட்டனர்.அப்போது நெடுங்காடு பண்டாரவாடை பகுதியில் மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார்.
போலீசார் விசாரணையில் சேலம், ஜாகீர் அம்மா பாளையம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் மனைவி செந்தாமரை, 47; எனத் தெரியவந்தது.பின் சப்.இன்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் செந்தாமரைக்கு உடைகள் வாக்கி கொடுத்து பாதுகாப்பு கருதி காப்பகத்தில் ஒப்படைந்தனர். பின்னர் நெடுங்காடு போலீசார் சேலம் பகுதியில் உள்ள அவரது மகள் கீர்த்தனாவுக்கு தகவல் கொடுத்தனர். நேற்று செந்தாமரையை அவரது மகள் கீர்த்தனாவிடம் ஒப்படைந்தனர்.