/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ஆய்வு
/
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி ஆய்வு
ADDED : நவ 10, 2024 04:31 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி பார்வையாளர் ஆஷிஷ் மாதோராவ் மோரே ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடந்து வருகிறது. புதுச்சேரி மாவட்ட தேர்தல் துறை சார்பில் ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்பு முகாம் நேற்று (9ம் தேதி) மற்றும் இன்று(10ம் தேதி) நடக்கிறது.
இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம், போட்டோ மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், முத்தியால்பேட்டை வாசவி பள்ளியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்பு முகாமை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி பார்வையாளர் ஆஷிஷ் மாதோராவ் மோரே நேற்று ஆய்வு செய்தார். இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு படிவங்களை வழங்கினார். சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.
ஆய்வின்போது, வாக்கா ளர் பதிவு அதிகாரி கந்தசாமி, உதவி பதிவு அதிகாரி பிரிதிவி, தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, முத்தியால்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சிறப்பு முகாம்களை ஆய்வு செய்தனர்.