/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டருக்கு 9 மாதத்திற்கு பின் மீண்டும் பணி
/
சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டருக்கு 9 மாதத்திற்கு பின் மீண்டும் பணி
சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டருக்கு 9 மாதத்திற்கு பின் மீண்டும் பணி
சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டருக்கு 9 மாதத்திற்கு பின் மீண்டும் பணி
ADDED : பிப் 21, 2024 06:47 AM
புதுச்சேரி, : அரசு விழாவில் பாதுகாப்பு நடவடிக்கையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு 9 மாதங்களுக்க பிறகு மீண்டும் பணியில் சேர்ந்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக தலைமை செயலரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நேரு எம்.எல்.ஏ., கடந்த ஜூன் 6ம் தேதி கம்பன் கலையரங்கத்தில் நடந்த அரசு விழாவில் தலைமை செயலர் ராஜிவ் வர்மா பங்கேற்றதை அறிந்து, தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேரு எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதனால், கோபமடைந்த நேரு எம்.எல்.ஏ.,கேட் மீது ஏறி குதித்து,உள்ளே சென்றுவிழா மேடைக்கு கீழே நின்று தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றம் சாட்டி பேசினார்.
இதையடுத்து, அரசு விழாவிற்கு சரியான முறையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாமல், அஜாக்கிரதையாக இருந்ததாக இன்ஸ்பெக்டர் கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், துறை ரீதியான விசாரணை நடத்த தலைமை செயலர் பரிந்துரை செய்தார்.
இன்ஸ்பெக்டர் கண்ணன் மீதான துறை ரீதியான விசாரணை முடிந்து, அறிக்கை டி.ஜி.பி.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், இன்ஸ்பெக்டர் கண்ணன் பாதுகாப்பு நடவடிக்கையில் அஜாக்கிரதையாக இல்லை என, தெரியவந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கண்ணன் மீதான சஸ்பெண்ட் உத்தரவு மற்றும் துறை ரீதியான விசாரணையைடி.ஜி.பி., சீனிவாஸ்ரத்து செய்துஉத்தரவிட்டார்.
இதையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் கண்ணன் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.

