தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

 சாரம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

 சாரம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


ADDED : ஏப் 17, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சாரம் முத்துவிநாயகர், முத்துக்குமார சுவாமி மற்றும் நாகமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விழாவின் மூன்றாம் நாள் உற்சவமான நேற்று, நாகமுத்து மாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க, ஊஞ்சலில் அமர்ந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில் உபயதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us