தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வரதராஜப் பெருமாள்  கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

 வரதராஜப் பெருமாள்  கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

 வரதராஜப் பெருமாள்  கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


ADDED : ஏப் 11, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.

புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 60ம் ஆண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 9ம் தேதி துவங்கியது. அதையொட்டி, அன்று காலை 10:30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது.

நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு முத்துபல்லக்கில் வீதியுலா நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாளுக்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், மதியம் 12:00 மணிக்கு சேவை சாற்று முறை, பிரசாதம் வினியோகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சுவாமி உள் புறப்பாடு, இரவு 9:00 மணிக்கு பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us