/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துமாரியம்மன் கோவிலில் 1ம் தேதி ஊஞ்சல் உற்சவம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் 1ம் தேதி ஊஞ்சல் உற்சவம்
முத்துமாரியம்மன் கோவிலில் 1ம் தேதி ஊஞ்சல் உற்சவம்
முத்துமாரியம்மன் கோவிலில் 1ம் தேதி ஊஞ்சல் உற்சவம்
ADDED : ஜன 30, 2026 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 1ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
புதுச்சேரி முத்துமாரியம்மன் கோவில் பெருவிழா கடந்த 18 ம் தேதி துவங்கி, வரும் 1ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று சிங்க வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
நாளை காலை 8:00 மணிக்கு ரதோற்சவம், 1ம் தேதி காலை 11:55 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.